10 நாட்களில் 10 கிலோ எடையை குறைக்க வேண்டுமா?… இதோ சூப்பரான டயட்…

10 நாட்களில் 10 கிலோ எடையை குறைக்க வேண்டுமா?… இதோ சூப்பரான டயட்

இன்றைய தலைமுறையினர் சந்திக்கும் உடல் பருமன் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. ஒருவர் தனது உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இல்லாவிட்டால், பல்வேறு நோய்களை பரிசாக பெற வேண்டியிருக்கும். இதற்கு முக்கிய காரணம் தற்போதைய மோசமான வாழ்க்கை முறை தான்.
வாழ்க்கை முறையில் சிறு மாற்றங்களைக் கொண்டு வந்தால், நிச்சயம் பல்வேறு நோய்களிடமிருந்து விடுபடலாம். குறிப்பாக உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், உண்ணும் உணவுகளில் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அதற்கு சரியான டயட்டை தேர்ந்தெடுத்து பின்பற்ற வேண்டும்.
இங்கு 10 நாட்களில் 10 கிலோ எடையை வேகமாக குறைக்க உதவும் ஓர் அற்புதமான டயட் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி வந்தால், நிச்சயம் உடல் எடையைக் குறைக்கலாம்.
900 கலோரிகளை கரைக்கும் டயட் இந்த டயட் மூலம் 900 கலோரி வரை குறைக்க முடியும். இந்த டயட்டில் வெறும் 4 உணவுப் பொருட்கள் தான் அடங்கியிருக்கும். இந்த 4 பொருட்கள் தான் இந்த மாயாஜாலங்களைச் செய்கிறது. இந்த டயட்டின் போது, காலை, மதியம், ஸ்நாக்ஸ் வேளை மற்றும் இரவில் என்ன சாப்பிட வேண்டும் என்று தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
காலை உணவு
வேக வைத்த முட்டை – 3, க்ரீன் டீ – 1 கப்

மதிய உணவு
வேக வைத்த முட்டை – 3, ஆப்பிள் – 1, க்ரீன் டீ – 1 கப்

ஸ்நாக்ஸ்
ஒருவேளை பசி எடுத்தால், அப்போது கேரட், வெள்ளரிக்காய் அல்லது முளைக்கட்டிய பயிர்களை ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.

மாலை
ஆப்பிள் – 1, க்ரீன் டீ – 1 கப்

இரவு உணவு
ஓட்ஸ் – 1 கப், க்ரீன் டீ – 1 கப். க்ரீன் டீயை இரவு தூங்குவதற்கு 1 மணிநேரத்திற்கு முன்பே பருக வேண்டும். ஓட்ஸ் உடன் பழங்கள், உலர் பழங்களை சேர்த்துக் கொள்ளலாம்.

குறிப்பு
இந்த டயட் சற்று கடினமாகத் தான் இருக்கும். ஆனால் இதை தினமும் பின்பற்றுவதன் மூலம், நிச்சயம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு உடல் பருமனை வேகமாக குறைக்கலாம். முக்கியமாக இந்த டயட்டை பின்பற்றும் போது, தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம். இதன் மூலம் இன்னும் வேகமாக உடல் எடையைக் குறைக்க முடியும்.

Leave a Reply