ஊட்டி: யாரும் பயப்படாதீங்க.. 2 நாளைக்கு வீட்டை விட்டு வர வேண்டாம்.. நீலகிரி மாவட்டத்தில் 283 இடங்கள் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் 42 பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் இருக்கிறது” என்று மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். நிவர் புயல் காரணமாக, தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. வழக்கமாக எப்போதுமே நீலகிரியில் மழை பொழிவு இருக்கும் என்றாலும், இந்த புயலில் கரையை கடக்கும்போது, கண்டிப்பாக
மேலும் மழை அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சென்னையில் கொட்டும் மழை… மறைந்த முதல்வர் கருணாநிதி வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர் இதையடுத்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவிக்கும்போது, “நீலகிரி மாவட்டத்தில் அதிக கனமழையும், பலத்த காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.. காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மரங்கள் விழக்கூடிய வாய்ப்புள்ளது.. அதனால், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். மாவட்டத்தில் 283 இடங்கள் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், குந்தா, பந்தலூர் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் ‘நிவர் புயல்’ காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ,வாகனங்கள், மின் வசதி, 40 பேரிடர் பயிற்சி குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 456 புயல் நிவாரண முகாம்களுக்கு சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும்.. நீலகிரி மலைப்பகுதியாக இருப்பதால் அதிக காற்றும் , மழையும் வர வாய்ப்புள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடுகள் அதிகமாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தாழ்வான இடங்கள், மண் சரிவு ஏற்படகூடிய இடங்களில் வீடுகளில் உள்ள பொது மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குவதற்கு, 456 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை. அவசர உதவிகளுக்கு,1077 க்கு தொடர்பு கொள்ள வேண்டும். ஆனால், யாரும் பயடப்பட தேவையில்லை” என்றார்.