ATM மூலம் பணம் எடுக்கும் பொழுது பெரும்பாலான நேரத்தில் பணம் சரியாக நமது கைக்கு கிடைத்துவிடுகிறது. இன்னும் சிலருக்கு, சில சமயங்களில் பணம் எடுக்கும்பொழுது பணம் வராது, ஆனால், கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்று மட்டும் செய்தி வரும். இந்த மாதிரியான தருணத்தில் நாம் அனைவரும் பதற்றமடைவோம். இனி அந்த கவலை வேண்டாம், இந்த சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பது என்று பார்க்கலாம். ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணம் வெளிவரவில்லையா? வங்கிக்கு நேரில் சென்று பணம் எடுப்பதை இப்பொழுது யாரும் செய்வதில்லை, தொகை பெரியதாக இருந்தால் மட்டுமே நேரடியாக வங்கி சென்று பணத்தை எடுக்கின்றனர். ஏடிஎம் மூலம் பணத்தை எடுப்பதையே மக்களும்
விரும்புகின்றனர். ஆனால், சில சமயங்களில் நெட்வொர்க் கோளாறு அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணம் வெளிவராமல், கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்று காண்பிக்கிறது. ஐயோ பணம் போச்சா! இந்த சூழ்நிலையில் தான் ஏடிஎம் பயனர்களுக்கு ஒரு பெரிய பதற்றம் உருவாகும், ஐயோ பணம் போச்சா என்று குழம்பிவிடுவார்கள். இப்படித் தோல்வியுற்ற பரிவர்த்தனை மூலம் எடுக்கப்பட்டதாகக் காட்டப்படும் பணத்தை எப்படி மீண்டும் திரும்பப் பெறுவது என்று இங்கு பலருக்கும் சரியாகத் தெரிவதில்லை. இனி அந்த கவலை வேண்டாம், குழப்பம் வேண்டாம். உங்கள் கணக்கிலிருந்து கழிக்கப்பட்ட பணத்தை எப்படி மீண்டும் பெறுவது என்று தெரிந்துகொள்ளுங்கள். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மலிவு விலை திட்டங்கள்.! சிறப்பான சலுகைகள்.! இந்த சிக்கலுக்கான முக்கியா காரணமே இது தானா? குறிப்பாக இந்த சிக்கல், ஏடிஎம் பயனர்கள் தங்களின் பணத்தை எடுக்க வேறொரு வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தைப் பயன்படுத்தும் போது மட்டுமே பெரிதும் நிகழ்கிறது. நீங்கள் வங்கி மாற்றி ஏடிஎம் பயன்படுத்தும் போது இப்படிச் சிக்கல் உருவாகினால் அது உங்களின் குழப்பத்தை இன்னும் அதிகரிக்கும். பணம் எடுக்க முயன்ற வங்கியில் புகார் அளிப்பதா அல்லது உங்கள் ஏடிஎம் கார்டு வங்கியில் புகார் அளிப்பதா என்ற குழப்பம் உருவாகும். தோல்வியுற்ற ஏடிஎம் பரிவர்த்தனை இந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சில விதிமுறைகளை வைத்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகள் அனைத்தும் அதன் வாடிக்கையாளர்களை முழுமையாகப் பாதுகாக்கின்றது. குறிப்பாக இந்த தோல்வியுற்ற ஏடிஎம் பரிவர்த்தனைக்கான விதிகளை மிகவும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் இந்திய ரிசர்வ் வங்கி வைத்துள்ளது. Google எச்சரிக்கை: ஆபத்தான அடுத்த 6 ஆப் பட்டியலை வெளியிட்ட கூகிள்! உடனே டெலீட் செய்யுங்கள்! எங்கு புகார் அளிக்க வேண்டும்? நீங்கள் எந்த ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணம் எடுக்க முயன்றாலும் சரி, அது உங்கள் வங்கி கணக்கு இருக்கும் வங்கியாக இருந்தாலும் சரி அல்லது பிற வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை நீங்கள் பயன்படுத்தியிருந்தாலும் சரி, உங்கள் கையில் வைத்துள்ள டெபிட் கார்ட் அட்டை எந்த வங்கியை சேர்ந்ததோ, அந்த வங்கிக்கு நேரில் சென்று தான் தோல்வியுற்ற பரிவர்த்தனை பற்றி நீங்கள் புகார் அளிக்க வேண்டும். உடனடியாக இதை செய்யுங்கள் ஏடிஎம் இல் தோல்வியுற்ற பரிவர்த்தனையின் குறிப்பிட்ட பரிவர்த்தனை எண் கொண்ட ரசீது அல்லது உங்கள் போனிற்கு வந்த எஸ்எம்எஸ் விபரங்களை எடுத்துக்கொண்டு உடனடியாக அருகிலுள்ள உங்கள் வங்கியின் கிளைக்குச் சென்று புகார் அளிக்க வேண்டும். பணம் உங்களுக்கு மீண்டும் கிடைக்கும் நீங்கள் வழங்கிய பரிவர்த்தனை எண்களை வைத்து வங்கி அதிகாரி ஸ்கேன் செய்து பிரச்சனை என்ன என்பதை
ஆராய்வார். பரிவர்த்தனை தோல்வியுற்றது என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பணம் உங்களுக்கு மீண்டும் கிடைக்கும். இப்பொழுது சில தனியார் வங்கிகளில் எடுக்கப்பட்டதாக காட்டப்படும் பணம் 7 நாட்களுக்குள் மீண்டும் உங்கள் கணக்கிற்கே வரும்படி ப்ரோக்ராமிங் செய்யப்பட்டுள்ளது.