சமூகவலைதள பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கோவிட்-19 பரவலில் தொடங்கி ஏராளமானோர் தங்களது பெரும்பாலான நேரத்தை சமூகவலைதளங்களில்தான் செலவிட்டு வருகின்றனர். சமூகவலைதள பயன்பாட்டில் பிரதானமாக வாட்ஸ்அப் வங்கியில் கூட கணக்கில்லாமல் இருக்கலாம் ஆனால்
ஏதேனும் சமூகவலைதளங்கள் ஒன்றிலாவது கணக்கில்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. சமூகவலைதள பயன்பாட்டுக்கு என்றே ஏணையோர் ஸ்மார்ட்போன்களை வாங்கி வருகின்றனர். வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் சமூகவலைதளங்களில் பிரதானமாக இருப்பது வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என்றே கூறலாம். இதுபோன்ற செயலிகளை நாம் தினசரி ஒரே மாதிரியான சேவைகளை பயன்படுத்தி வருகிறோம். அதில் பல்வேறு அம்சங்கள் இருக்கிறது என்பதே நாம் ஆராய்வதில்லை. பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம் சமூகவலைதள பயன்பாடுகளில் பிரதான ஒன்றாக இருப்பது வாட்ஸ்ஆப். வாட்ஸ்அப் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. பல்வேறு தேவைகளுக்கு வாட்ஸ்ஆப் பயன்பாடு என்பது பிரதானமாக இருந்து வருகிறது. விண்வெளியில் நேருக்கு நேர் வந்த இஸ்ரோ- ரஷ்ய
செயற்கைகோள்கள்- மோதும் தூரத்தில் வந்ததால் பதற்றம்! வாட்ஸ்அப் ஆஃப்லைன் சேட்டிங் வாட்ஸ்அப் குறிப்பிடத்தகுந்த பயன்பாடு ஒன்றை சில தந்திரங்கள் மூலம் மேற்கொள்ளலாம். அது வாட்ஸ்அப் ஆஃப்லைன் சேட்டிங் (Whatsapp Offline Chatting) ஆகும்.
அதை பயன்படுத்துவதற்கான வழிமுறைகளையும் அதை எதற்கு பயன்படுத்துவது என்பது குறித்தும் பார்க்கலாம். ஆஃப்லைன் சேட்டிங் அம்சம் வாட்ஸ்அப் ஆஃப்லைன் சேட்டிங் அம்சம் குறித்து பார்க்கையில் இதை பயன்படுத்தினால் நாம் ஆன்லைனில் இருக்கிறோமா என்பதும் இரவு எத்தனை மணிவரை ஆன்லைனில்
இருக்கிறோம் என்பதும் பிறருக்கு தெரிவிப்பதை தடுக்கலாம். ப்ளே ஸ்டோர் செயலி பதிவிறக்கம் இந்த பயன்படுத்துவதற்கு ப்ளே ஸ்டோர் செயலியை திறந்து வாட்ஸ்அப் பப்பிள் ஃபார் சேட் (Whatsapp Bubble For Chat) என்ற செயலியை தேடி பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த செயலி 1K கூடுதல் பதிவிறக்கங்களை பெற்றுள்ளது.
இந்த செயலியை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். எளிதாக சேட்டிங் செய்யலாம் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்தவுடன் அதில் கேட்கப்படும் அணுகலுக்கு அனுமதி வழங்க வேண்டும். பின் வாட்ஸ் அப் ஆஃப்லைனில் எளிதாக சேட்டிங் செய்யலாம். இந்த செயலியை நிருவி வாட்ஸ்அப்பை பயன்படுத்துவதன் மூலம் 24 மணிநேரமும் ஆஃப்லைன் இருந்தபடியே சேட்டிங் செய்யலாம்.