ஜூம் அதன் சேவையில் மற்றொரு பாதுகாப்பு அம்சத்தை தற்பொழுது சேர்த்துள்ளது. தரவு மற்றும் பாதுகாப்பு மீறல்களைத் தடுக்க நிறுவனம் தற்பொழுது தனது பயன்பாட்டில் 2 காரணி-அங்கீகாரத்தை செயல்படுத்துகிறது. 2 காரணி-அங்கீகாரம் என்பது அடிப்படையில் உங்கள் கணக்கிற்கான கூடுதல் பாதுகாப்பு அடுக்கு ஆகும், இதனால் உங்கள் பாஸ்வோர்ட் உடன் கூடுதலாக உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும் OTP குறியீட்டையும் பயன்படுத்தலாம். ஜூம் பயன்பாட்டில் எப்படி 2 ஃபாக்டர்
ஆதென்டிகேஷன் அங்கீகாரத்தை இயக்குவது? என்று தெரிந்துகொள்ளுங்கள். இதை எவ்வாறு இயக்குவது என்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், ஜூம் ஆதரவு பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுங்கள். முதலில் ஜூம் வெப் இணையதளத்தில் உள்நுழைக. நேவிகேஷன் மெனுவில், அட்வான்ஸ் மற்றும் பாதுகாப்பு என்பதைக் கிளிக் செய்யுங்கள். 2 ஃபாக்டர் ஆதென்டிகேஷன் அங்கீகார விருப்பம் ஆக்டிவேட்டில் உள்ளதா என்பதை செக் செய்யுங்கள். இதற்காக 2FA ஐ இயக்க பயனர்களைக் குறிப்பிட இந்த மூன்று விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் உங்கள் கணக்கில் உள்ள அனைத்து பயனர்களும் (All users in your account): இது உங்கள் கணக்கில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் 2FA ஐ இயக்கும். திருடிய போனை திரும்பக் கொடுத்த திருடன்: அதுக்கு சொன்ன காரணம் இருக்கே- ஓனரே ஷாக் ஆகிட்டாரு! குறிப்பிட்ட ரோல் கொண்ட பயனர்கள் (Users with specific roles): இது குறிப்பிட்ட பாத்திரங்களைக் கொண்ட பயனர்களுக்கு மட்டும் 2FA ஐ இயக்கும். பென்சில் ஐகானைக் கிளிக் செய்து, பயனர்களின் ரோலை தேர்ந்தெடுத்து, ok என்பதைக் கிளிக் செய்யவும். குறிப்பிட்ட குழுக்களைச் சேர்ந்த பயனர்கள் (Users belonging to specific groups): இது குறிப்பிட்ட குழுக்களில் உள்ள பயனர்களுக்கு 2FA ஐ இயக்கும். பென்சில் ஐகானைக் கிளிக் செய்து, குழுக்களைத் தேர்ந்தெடுத்து, ok என்பதைக் கிளிக் செய்யவும். 2FA ஐ நடைமுறைப்படுத்துவது, முக்கியமான தரவு மற்றும் வாடிக்கையாளர்
தகவல்களுக்கான இணக்கக் கடமைகளை பூர்த்தி செய்ய நிறுவனங்களுக்கு உதவுகிறது, “என்று ஜூம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. புதிய அம்சத்துடன், OTP களைப் பெற Microsoft Authenticator அல்லது Google Authenticator போன்ற அங்கீகார பயன்பாடுகளையும் பயன்படுத்தலாம். அல்லது உங்கள் மொபைல் எண் அல்லது உங்கள் மின்னஞ்சல் முகவரியைச் சேர்த்த பிறகு உங்கள் OTP-ஐ பெறலாம்.