TamilMother

tamilmother.com_logo

மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க செய்ய வேண்டிய விஷயங்கள்

Tamil_News_tamil-news-protect-brain-health_SECVPF
மூளை
 
கற்றல், உழைப்பு முதல் ஆளுமை வளர்ச்சி வரை வாழ்வின் அனைத்து தேவைகளுக்கும் மூளை முக்கிய பங்கு வகிக்கிறது. நீண்டகால வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் மூளை இன்றியமையாதது. மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
 
* மூளையின் செயல்பாட்டை சிறப்பாக்குவதில் பழங்கள், காய்கறிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துகள், குறிப்பாக ஆக்ஸிஜனேற்றங்கள் இருப்பதால் உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். உப்பை குறைவாக சேர்த்துக்கொள்வதும் மூளையின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
 
* குறைந்த கொழுப்பு கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். அவை மூளையில் கொழுப்பு படிவதை தடுக்க உதவும். கொழுப்பு உணவுகளுக்கு பதிலாக வைட்டமின் பி நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது நல்லது. அவை முதுமையை தள்ளிப்போடும் தன்மை கொண்டது.

 
* போதை மருந்துகளின் பயன்பாடு மூளைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். அதனை அறவே தவிர்க்க வேண்டும். போதை பழக்கத்தில் இருந்து மீள முடியாதவர்கள் மருத்துவ நிபுணர்களின் உதவியை நாட வேண்டும்.
 
*ஆல்கஹால் மூளைக்கு நச்சுத்தன்மை விளைவிக்கக்கூடியது. அதை அதிகமாக உட்கொள்வது மூளை செல்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.
 
* தினமும் 30 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்வது மூளையின் ரத்த ஓட்டம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும். அவற்றின் சிறந்த செயல்பாட்டிற்கு வழிவகை செய்யும். முதுமையை தடுப்பதற்கான சிறந்த வழிகளில் இதுவும் ஒன்றாகும்.
 
* நினைவாற்றல் இழப்புக்கு மன அழுத்தம் முக்கிய காரணங்களுள் ஒன்றாக அமைந்திருக்கிறது. மூளைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
 
* குழந்தை பிறந்த முதல் ஐந்தாண்டுகளில் மூளையின் வளர்ச்சி துரிதமாக நடைபெறும். அந்த ஆண்டுகளில் பெற்றோர்கள் குழந்தையை அறிவார்ந்த விளையாட்டுகளில் ஈடுபடுத்துவது முக்கியம். இது நீண்ட கால வளர்ச்சி மற்றும் மூளையின் செயல்பாட்டிற்கு உதவும்.
 
* ஒரே நேரத்தில் பல பணிகளில் ஈடுபடுவது கவனக்குறைவு மற்றும் நினைவாற்றல் இழப்புக்கு வழிவகுக்கும் என்பதால் அதனை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். மூளையின் ஆரோக்கியத்தை பராமரிக்க அனைத்து அம்சங்களிலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பது முக்கியமானது.

 

bail_d.jpg

2006 ஆம் ஆண்டு உமேஷ் பால் கடத்தல் வழக்கில் அதிக் அகமது குற்றவாளி, அவரது சகோதரர் விடுவிக்கப்பட்டார்

ஒரு எம்பி-எம்எல்ஏ நீதிமன்றம் பிரயாக்ராஜ் 2006 ஆம் ஆண்டு உமேஷ் பால் கடத்தப்பட்ட வழக்கில், உத்திரப் பிரதேசத்தில், குண்டர்-அரசியல்வாதியான அதிக் அகமது மற்றும் இருவர் குற்றவாளிகள் என்று செவ்வாயன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் சிறப்பு

மேலும் படிக்க »
106901172-1624474214482-106901172-1624408705315-gettyimages-491551484-MS_WINDOWS_10.jpg

மைக்ரோசாப்ட் பாதுகாப்பு கோபிலட்டை தனிப்பட்ட முன்னோட்டத்தில் அறிமுகப்படுத்துகிறது

அக்டோபர் 6, 2015 அன்று நியூயார்க்கில் நடந்த Windows 10 சாதனங்கள் நிகழ்வின் போது மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷனின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா பேசுகிறார். மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் தனது முதல் லேப்டாப், மூன்று

மேலும் படிக்க »
1680019272_photo.jpg

ஜம்மு-காஷ்மீரின் சம்பாவில் போதைப்பொருள் மற்றும் கால்நடை கடத்தல்காரர்கள் 8 பேர் கைது | ஜம்மு செய்திகள்

ஜம்மு: போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் மாடு கடத்தல்காரர்களுக்கு எதிரான இயக்கத்தைத் தொடர்ந்து, எஸ்.எஸ்.பி சம்பா பெனாம் தோஷ் வழிகாட்டுதலின் கீழ் சம்பா போலீசார் ஒரு பெரிய வெற்றியாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நாகா சோதனையின்

மேலும் படிக்க »
99068275.cms_.jpeg

20 ஆண்டுகள் மற்றும் எண்ணிக்கை: தெலுங்கு திரையுலகில் அல்லு அர்ஜுனின் எழுச்சியூட்டும் பயணம்

கருத்துகள் () வகைபடுத்து: புதியதுமேல் வாக்களிக்கப்பட்டதுபழமையானவிவாதிக்கப்பட்டதுகீழ் வாக்களிக்கப்பட்டது நெருக்கமான கருத்துக்கள் எண்ணிக்கை: 3000 உடன் உள்நுழையவும் முகநூல்கூகிள்மின்னஞ்சல் எக்ஸ் ஆபாசமான, அவதூறான அல்லது எரிச்சலூட்டும் கருத்துக்களை இடுகையிடுவதைத் தவிர்க்கவும், மேலும் எந்தவொரு சமூகத்திற்கும் எதிராக

மேலும் படிக்க »
CCI_UDHindu_KSL_UQ561T8Q4_R1561280480_3_2928fc4e-a7b4-428a-9d73-1b3ed0b267e4.jpg

தனிநபர் கடன்கள் தொடர்ந்து கடன் விரிவாக்கத்தை தூண்டுகிறது என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது

இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய காலாண்டு அடிப்படைப் புள்ளிவிவர அறிக்கையின்படி, தனிநபர் கடன்கள் தொடர்ந்து கடன் விரிவாக்கத்திற்கு வழிவகுத்தன, ஒட்டுமொத்த வங்கிக் கடன் வளர்ச்சி (yoy) 2022 டிசம்பர் இறுதி வரை 16.8 சதவீதமாக

மேலும் படிக்க »
error: Content is protected !!
Scroll to Top