உங்கள் Gmail பாதுகாப்பை இரட்டிப்பாக அதிகரிக்க இதை உடனே செய்யுங்கள்.. எளிய செக்யூரிட்டி டிப்ஸ்.. உலகம் முழுக்க சுமார் 1.5 பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் ஜிமெயில் பயன்படுத்துகின்றனர். உலகின் மிகவும் பிரபலமான மின்னஞ்சல்
சேவையாக ஜிமெயில் விளங்குகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மோசமான ஹேக்கர்களால் உங்கள் மின்னஞ்சல் ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. வலுவான பாஸ்வோர்டு இருந்தால் உங்கள் நிலை கொஞ்சம் பாதுகாப்பானது தான். ஜிமெயில் பாதுகாப்பை இரட்டிப்பாக அதிகரிக்க ஒரு வழி இருப்பினும் உங்கள்
ஜிமெயில் பாதுகாப்பை இரட்டிப்பாக அதிகரிக்க ஒரு வழி இருக்கிறது, இந்த சேவையை நீங்கள் உங்கள் ஜிமெயில் அக்கௌன்ட்டில் ஆக்டிவேட் செய்தால் நிச்சயம் உங்கள் மெயில் பாதுகாப்பாக இருக்கும் என்று கூகிள் தெரிவித்துள்ளது. இதை எப்படி எளிமையாக செய்யலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம். 2
ஃபாக்டர் ஆதென்டிகேஷன் உங்கள் மின்னஞ்சல் கணக்கைப் பாதுகாக்க வேண்டுமானால், இரண்டு காரணி அங்கீகாரம் என்று அழைக்கப்படும் 2 ஃபாக்டர் ஆதென்டிகேஷன் பாதுகாப்பை நீங்கள் பயன்படுத்த வேண்டும், உங்களுடைய ஜிமெயில் கணக்கிற்கு இந்த 2 ஸ்டெப் சரிபார்ப்பை அமைப்பது எளிதானது. இரண்டு காரணி அங்கீகாரத்தை எவ்வாறு இயக்குவது மற்றும் உங்கள் தரவு மற்றும் தனிப்பட்ட
தகவல்களை எவ்வாறு பாதுகாப்பது என்று பார்க்கலாம். பாக்கிஸ்தான் உள்ளே வராத கழுகு.! காரணம் சொன்னா நீங்க நம்பமாட்டீங்க.! உங்கள் Google கணக்கிற்கு இரண்டு காரணி அங்கீகாரத்தை எவ்வாறு அமைப்பது? உங்கள் கணக்கிற்கான இரண்டு காரணி அங்கீகாரத்தை இரண்டு வழிகளில் அமைக்க Google உங்களை
அனுமதிக்கிறது. முதல் முறை கூகிள் ப்ராம்ப்ட் மற்றும் மற்றொரு முறை கூகிளின் அங்கீகார பயன்பாட்டைப் பயன்படுத்தி இரண்டு காரணி அங்கீகாரத்தை அமைக்க முடியும். இதை எப்படி செய்வது என்று படி-படியாகப் பார்க்கலாம். செயல்முறை – 1 உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது கணினியில் myaccount.google.com செய்து, உங்கள் Google கணக்கை லாகின் செய்யுங்கள். இடதுபுறத்தில் Security டேப்-ஐ கிளிக் செய்க. கொஞ்சம் கீழே ஸ்க்ரோல் செய்து, “2-Step Verification” என்பதைக் கிளிக்
செய்க. Get Started பொத்தானைக் கிளிக் செய்க. இப்போது இரண்டு காரணி அங்கீகாரத்தை அமைக்க திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். இன்று இரவு தாக்கப்படுவோம்; பின்னர் பல விபரீதங்களை சந்திப்போம்; ஏன்.? எதனால்.? Try it Now கிளிக் செய்க உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த உங்கள் கடவுச்சொற்களை உள்ளிடவும். Try it Now கிளிக் செய்து இப்போது முயற்சிக்கவும் கூகிள் ஆறு இலக்க சரிபார்ப்புக் குறியீட்டை அனுப்பக்கூடிய தொலைப்பேசி எண்ணைச் சேர்க்கவும். Send என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் தொலைப்பேசி எண்ணை உறுதிப்படுத்த ஆறு
இலக்க குறியீட்டு எண்ணை டாய் செய்து Next கிளிக் செய்க. இரண்டு காரணி அங்கீகாரத்தை இயக்க, Turn On என்பதைக் கிளிக் செய்க. Google Authenticator சேவையை எவ்வாறு பயன்படுத்துவது? உங்கள் Google கணக்கைப் பாதுகாக்க மற்றொரு வழி Google Authenticator அங்கீகாரமாகும். இந்த முறையைப் பயன்படுத்த, உங்கள் இரண்டு காரணி அங்கீகாரத்திற்கான சீரற்ற குறியீடுகளை உருவாக்கப் பயன்படும் பயன்பாட்டை ஆப் ஸ்டோர் அல்லது கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். செயல்முறை – 2 உங்கள் கணக்கின் பாதுகாப்பு விருப்பங்களுக்குச் சென்று, அங்கீகார பயன்பாட்டைக் கிளிக் செய்க. நீங்கள் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனைப்
பயன்படுத்துகிறீர்களா என்பதைத் தேர்வுசெய்க. உங்கள் அங்கீகார பயன்பாட்டிலிருந்து QR குறியீட்டை ஸ்கேன் செய்யுங்கள். 2 ஃபாக்டர் ஆதென்டிகேஷன் செட் செய்யப்பட்டது உங்கள் ஸ்மார்ட்போனில் Google Authenticator பயன்பாட்டில் காட்டப்பட்டுள்ள குறியீட்டை உள்ளிடவும் Verify கிளிக் செய்யுங்கள். உங்கள் ஜிமெயில் இப்பொழுது 2 ஃபாக்டர் ஆதென்டிகேஷன் அங்கீகரிக்கப்பட்டிருக்கும்.